Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேறும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன்: விஜய்மல்லையா

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (18:25 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் விஜய் மல்லையா தான் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துவிட்டு வந்ததாக புதுகுண்டு ஒன்றை போட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசுதான் மறைமுகமாக உதவி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் விஜய் மல்லையாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து லண்டனில் விஜய்மல்லையா கூறியபோது, 'நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சி செய்ததாகவும், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இதற்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments