இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது நான்காவது அலை இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 3 அலை கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த சில வாரங்கள் முன்பு கொரோனா பெரிதும் குறைந்திருந்தது. இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் சில மாநிலங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா 4வது அலை உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இது நான்காவது அலை இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதால் பாதிப்புகள் சில இடங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் இது நான்காவது அலை இல்லை என கூறப்பட்டுள்ளது.