மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படும் மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் நாடு முழுவதும் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தான் சேர்ப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்த பல்கலைக்கழகங்களில் பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் செல்லாது என்றும், நாடு முழுவதும் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.