Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (20:03 IST)
கர்நாடகாவில் வாக்காளர் அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
 
கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டைகளை பணம் கொடுத்து அரசியல் கட்சியினர் வாங்கியதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
 
இதையடுத்து, பறக்கும் படையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கே பத்தாயிரம் வாக்காளர் அட்டைகள் சிக்கின. வாக்காளர் அடையாள அட்டை சிக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதற்கிடையே, அரசியல் கட்சிகள் வாக்காளர் அட்டை சிக்கிய தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி வந்தனர். 
 
இந்த நிலையில் ஆர்.ஆர் தொகுதியில் மாட்டும் நாளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற்று, மே31ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments