Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி....மீட்கும் பணி தீவிரம்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (21:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் 300 அடி ஆழ்துறை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமியை மீட்கும் பணி 22 மணி  நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சோஹூர் அருகேயுள்ள மூங்வாலி என்ற கிராமத்தில் வீட்டின் அருகில் சிறுவர் மற்றும் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 2 வயது சிறுமி ஒருவர் எதிர்பாரா விதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்க போராடினர்.

குழந்தை ஆழ்துளை கிணற்றின் அடியில் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாக குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஆழ்துளை கிணற்றின் அருகில் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுமியை 50 அடியில் பத்திரமாக மீட்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்புத்துறையினருடன் தேசிய பேரிடன் மீட்புக் குழுவினர்  இப்பணியில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments