பத்து வருடங்களுக்கு முன்னாள் இறந்து போன பெண் ஒருவருக்கு வருமானவரித்துறை ரூபாய் 7 கோடி வருமானவரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 10 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவருக்கு 2018 - 19ஆம் தேதி ஆண்டுக்கான 7.5 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுமாறும் வருமானவரித்துறை இடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இறந்து போன பெண்ணின் பெயரில் போலியாக பான் கார்டு எண் வாங்கப்பட்டு அந்த எண் வங்கி கணக்கில் உடன் இணைக்கப்பட்டதால் இந்த பிரச்சனை எழுந்து உள்ளதாகவும் இந்த பிரச்சனைக்கும் இறந்து போன அந்த பெண்ணுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இதுபோன்று ஏராளமான நோட்டீஸ்கள் வருமான வரித்துறையில் இருந்து வருவதாகவும் பலர் கூறி வருகின்றனர். எனவே போலியாக பான் எண் தொடங்கப்பட்டு அது வங்கியுடன் இணைக்கப்பட்டு முறைகேடு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.