Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகரிக்கும் சிசேரியன்.. டாக்டர்களின் பேராசையே காரணம்! - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேதனை!

Advertiesment
Caesarean in andhra

Prasanth K

, புதன், 24 செப்டம்பர் 2025 (09:54 IST)

ஆந்திரா சிசேரியன் பிரசவத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

 

நேற்று ஆந்திர பிரதேச சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர் “நாட்டிலேயே அதிகமான சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடக்கும் மாநிலமாக ஆந்திரா உள்ளது. அனைத்து சிசேரியன் அறுவை சிகிச்சைகளில் 90 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. இதில் 56.62 சதவீத சிசேரியன் அறுவை சிகிச்சைகள் டாக்டர்களின் பேராசையால் ஊக்குவிக்கப்பட்டு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

 

ஆந்திர அரசு இந்த போக்கை அங்கீகரிக்கவில்லை. இனிமேல் பாதுகாப்பான பிரசவங்களை நடத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.

 

மேலும் கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினரே நல்ல நேரம் பார்த்து சுகப்பிரசவத்தை தவிர்த்து சிசேரியன் செய்வது குறித்து கண்டித்து பேசிய அவர் “நல்ல நேரம், முகூர்த்தம் பார்த்து அந்த நேரத்திற்கு சிலர் பிரசவம் செய்கின்றனர். அது தவறு. கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கையான உடலை நல்ல நேரத்தை காரணம் காட்டி அறுவை சிகிச்சை செய்வது தவறு” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுற்றுலா வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தாய்லாந்து