Webdunia - Bharat's app for daily news and videos

Install App

92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. இன்று I.N.D.I.A கூட்டணி அவசர ஆலோசனை..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:29 IST)
பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இது குறித்து I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து இன்று டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

குறிப்பாக எதிர்கட்சிகள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனை அடுத்து டெல்லியில் இன்று நடைபெறும் I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு இது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவையும் ஆலோசனை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments