சமீப காலமாக க்ரிப்டோ கரன்சி புழக்கம் உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவும் டிஜிட்டல் நாணயம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் க்ரிப்ரோகரன்சி புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதில் பிட்காயினில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் பிட்காயின் மீதான முதலீடு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் க்ரிப்டோ கரன்சியின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், புதிய டிஜிட்டல் நாணயத்தை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் நாணயத்தை வெளியிட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த டிஜிட்டல் நாணயத்தில் பலரும் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.