சர்வதேச விமான சேவைக்கு மேலும் ஒரு மாதம் தடை நீடிப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ஏராளமான தளர்வுகளை அளித்துள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில சிறப்பு விமானங்கள் மற்றும் வெளிநாட்டு பயணம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெளிநாட்டுக்கு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப வரும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் பாதிப்பு அளவு குறைந்து வந்தாலும் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சரக்கு விமான போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.