இந்தியாவில் யூபிஐ பணப்பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் அதிகளவு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை தொடர்ந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து முன்னிருத்தப்பட்டது. தற்போது பெருநகரங்களில் பெரிய மால் முதல் பெட்டிக் கடை வரை அனைத்திலும் யூபிஐ பரிவர்த்தனைக்கான க்யூ ஆர் கோடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 500 கோடி பணப்பரிவர்த்தனைகள் யூபிஐ மூலமாக நடந்துள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்ற்ங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.