இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் இன்று 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மேலும் புதிதாக 7 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,715 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,345 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,36,710 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28,857 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,94,43,26,416 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,94,086 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.