இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் உறுதியுடன் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கியதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், மே 8 மற்றும் 9 தேதிகளில் இரு நாடுகளும் எல்லை பகுதியில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின.
பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தையும் இந்தியா துல்லியமாக சுதர்சன சக்ரா துணையுடன் அழித்து விட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே நேரத்தில், பாகிஸ்தானின் ஜே.எஃப்-17 போர் விமானங்கள் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இந்தியாவின் ஆதம்பூர் பகுதியில் உள்ள எஸ்-400 என்ற சுதர்சன சக்ரா அமைப்பை தாக்கியதாக பாகிஸ்தான் மற்றும் சீன ஊடகங்கள் கூறியுள்ளன. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என இந்திய ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் பொய்யான தகவல்களை விரைவாக பரப்பி வருவதாகவும், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.