இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலை முன் எப்போது இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் விளக்கத்தில் “டெல்லியில் கடந்த 3 நாட்களாக மணிக்கு 45 கி.மீ என்ற வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளது. இது பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் காணப்படுகிறது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் ஹோலி அன்று 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த மார்ச் மாதம் இந்தியாவில் பதிவாகியுள்ள வெப்பநிலை கடந்த 76 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.