இந்தியா பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடும் ஒப்புக்கொண்டன.
இதனை அடுத்து சமரச பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளின் ராணுவ இயக்குனர்கள் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த மூன்று நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று நடக்க இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது எதனால் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.