Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

Advertiesment
விஐபி எண்

Siva

, திங்கள், 1 டிசம்பர் 2025 (18:36 IST)
ஹரியானா மாநிலத்தின் விஐபி கார் பேன்சி எண் 'HR88B8888', கடந்த வாரம் இரண்டு நாள் ஆன்லைன் ஏலத்தில் ரூ.1.17 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, இந்தியாவின் மிக விலையுயர்ந்த எண் தகடு என்ற பெருமையை பெற்றது.
 
இந்த பேன்சி எண்ணை ஏலம் எடுத்த சுதீர் குமார், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான இன்றுக்குள்  தொகையை செலுத்தத் தவறிவிட்டார். இவ்வளவு பெரிய தொகையை நேம்போர்டுக்காக செலவிடுவதற்கு தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
 
இதன் காரணமாக, இந்த விஐபி  பேன்சி எண் விரைவில் மறு ஏலத்திற்கு வரவுள்ளது. 'HR88B8888' என்ற இந்த எண்ணின் தனித்துவம் என்னவென்றால், இதில் உள்ள பெரிய எழுத்து 'B' ஆனது '8' என்ற எண்ணை போலவே காட்சியளிப்பதால், இது தொடர்ச்சியான '8' எண்களின் கோவையாக தெரிவதுதான் இதற்கு அதிக விலை போக காரணமாகும். 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!