ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட்டுள்ளது.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ளும் முழுமுனைப்பில் உள்ளது. எற்கனவே ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பின்பு அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவுக்கு சிஏஏடிஎஸ் சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த வரிசையில் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள சீனாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார தடை (சிஏஏடிஎஸ்) சட்டத்தின்படி ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் மீது ஏற்கனவே அமெரிக்கா இத்தடையை கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனைகள் வாங்கும் பட்சத்தில் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா பயம் காட்டியது. அமெரிக்காவின் மிரட்டலைக் கண்டுகொள்ளாத இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 எஸ் 400 ஏவுகனைகளை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. இந்த ஏவுகனைகளின் மொத்த விலை 40000 கோடி ரூபாய் ஆகும்