Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம்- ஆம் ஆத்மி திட்டவட்டம்!

Sinoj
திங்கள், 26 பிப்ரவரி 2024 (12:51 IST)
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என்று  ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.  

விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கூட்டணியில் தொடரக் கூடாது என அழுத்தக் கொடுக்கப்படுவதாக டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாத் தெரிவித்துள்ளார்.
 
மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஆறு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆறு முறையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகவில்லை.
 
இன்று (26 ஆம் தேதி) கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் ஆஜர் ஆகுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில், ஆம் ஆத்மி கூட்டணியைவிட்டு விலக மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி  தெரிவித்துள்ளது.
 
டெல்லி முதலமைச்சர் . தினமும் சம்மன் அனுப்புவதற்குப் பதிலாக நீதிமன்ற முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்கலாம். நாங்கள் இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை தரவேண்டாம் என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு  டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், ''  இன்னும் 2-3 நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். . அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும். இந்தியா  கூட்டணியில் தொடரக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு விசாரணை ஏஜென்ஸிகளை கண்டு பயமில்லை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் ''என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments