இந்திய கப்பற்படை தலைவர் நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று இந்திய விமானப்படையின் தலைவர் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய கப்பற்படை மற்றும் இந்திய விமானப்படை தலைவர்கள் அடுத்தடுத்த நாளில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதால், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடற்படை தலைவர், இன்று விமானப்படை தலைவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்திருப்பதால், எந்த நேரத்திலும் இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.