நேபாள தேர்தலின் பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு!
நேபாளத்தில் நவம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலின் சர்வதேச பார்வையாளராக பணிபுரிய இந்திய தேர்தல் ஆணையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் அவர்களுக்கு சர்வதேச பார்வையாளராக பணிபுரிய நேபாளத்தின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது
இந்த அழைப்பை ஏற்று இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது குழுவுடன் நவம்பர் 18 முதல் 22 வரை நேபாளம் செல்வார் என்றும் அவர் அங்கு நடைபெறும் தேர்தலை கண்காணிப்பாளர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக தேர்தல் அமைப்பின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே.