Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் படைகள்: இந்தியாவின் ப்ளான் என்ன??

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (08:48 IST)
லடாக் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு திடீரென சீன ராணுவ வீரர்கள் இந்தியாவின் எல்லையான கால்வான் பள்ளத்தாக்கிற்கு நுழைந்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35 வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
சீனா அத்துமீறி இந்திய பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் நுழைந்ததே இந்த மோதலுக்கு காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டது. 
 
அதில் கால்வாய் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது என்றும் அதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கால்வான் பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த பகுதியும் சீனாவுக்கு உரிமை என திடீரென நேற்று நள்ளிரவு சீனாவிடம் இருந்து வெளியான அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், இந்திய விமானப் படையின் சுகோய்-30எம்கேஐ, மிராஜ் 2000, ஜாக்குவார் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் ஆய்வு செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments