நாடு முழுவதும் கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு 35 ஆயிரம் பேர்களுக்கு வேலை தர இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலை இழந்து இருக்கும் நிலையில் புதிதாக படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் நாடு முழுவதும் 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த புதிய பணியாளர்கள் சேர்க்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த காலாண்டில் சுமார் 8300 பேர்களுக்கு வேலை வழங்கி உள்ளது
இந்த நிலையில் மேலும் 35,000 புதிய பணியாளர்களை எடுக்க இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக படித்து வெளியேறும் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது