Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான சேவைக்கு மேலும் ஒரு மாதம் தடை நீடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
சர்வதேச விமான சேவைக்கு மேலும் ஒரு மாதம் தடை நீடிப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ஏராளமான தளர்வுகளை அளித்துள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஒரு சில சிறப்பு விமானங்கள் மற்றும் வெளிநாட்டு பயணம் செய்யப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் ஒரு மாதம் சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது
 
இதனை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளிநாட்டுக்கு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப வரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் ஒருசில சிறப்பு விமானங்களின் மூலம் அவர்கள் பயணம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments