கொரோனா வைரஸ் பாதிப்பின் போது படு =பாதாளத்துக்கு சென்ற பங்குச்சந்தை, கடந்த சில வாரங்களாக முன்னேறி கொண்டுவந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சென்றதால் முதலீட்டாளர்கள் பல மடங்கு லாபம் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை இறங்கி வருகிறது. குறிப்பாக நாளொன்றுக்கு சென்செக்ஸ் 900 புள்ளிகள் 700 புள்ளிகள் என இறங்கியதால் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சம் அடைந்தனர்
ஏறிய வேகத்தில் திடீரென பங்குச்சந்தை இறங்கியதால் பலரும் தங்களுடைய லாபத்தை புக் செய்தனர் என்பதும் முக்கிய பங்கு சந்தையில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் பங்கு சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை இறங்கி உள்ளது. தற்போது சென்செக்ஸ் 46 ஆயிரத்து 700 புள்ளிகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது என்பதும் நிப்டி 23 புள்ளிகள் இறங்கி 13790 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேநேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது என்பதும் தற்போது 73.17 ரூபாயாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஒருபக்கம் பங்குச்சந்தை இறங்கி வந்தாலும் கமாடிட்டி மார்க்கெட் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக தங்கம் வெள்ளி ஆகியவை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது