Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பங்குச்சந்தையில் ஐ.ஆர்.சி.டி.சி பங்கு: வாங்கலாமா?

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (07:15 IST)
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகள் மத்திய அரசின் வசம் இருந்த நிலையில், தற்போது, 12.5% பங்குகளை மத்திய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு விற்றுள்ளது. 
 
இந்தப் புதிய பங்கு வெளியீட்டின்மூலம் சுமார் 645 கோடி ரூபாய் வரை திரட்ட  ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 10 ரூபாய் முக மதிப்புள்ள இரண்டு கோடி பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்த நிலையில் இந்த பங்குகளை வாங்க பலரும் போட்டி போட்டனர். 
 
ஐ.ஆர்.சி.டி.சி மொத்தம் 2,01,60,000 பங்குகள் மட்டுமே வெளியிட்டது. ஆனால் இந்த பங்குகளை வாங்க வந்திருந்த விண்ணப்பங்கள் மொத்தம் 225.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஐ.ஆர்.சி.டி.சி பங்கு நேரடியாக பங்குச்சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நேரடியாக ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளை வாங்க முடியாதவர்கள் பங்குச்சந்தை மூலம் வாங்க முயற்சிப்பார்கள் என்பதால் முதல் நாளிலேயே இந்த பங்கின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
 
மேலும் நீண்ட கால அடிப்படையில் இந்த பங்குகளை வாங்கலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments