ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவது மிகப்பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்ட இரு அவைகளிலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவுகளை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் அமித் ஷா. இதனால் மிகப்பெரும் கூச்சல், குழப்பம் எழுந்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால் போர் பதற்றம் உருவாக கூடுமென முன்னரே கணித்த மத்திய அரசு காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மேலும் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து பிரிவான 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீரில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டாங்களும், கலவரங்களும் வெடிக்க கூடுமென்பதால் பதட்ட நிலை அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கு 144 தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இந்த 144 தடை விதிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் அச்சம் நிலவுகிறது.
1975ல் இந்திராகாந்தி எமர்ஜென்சி அறிவித்த காலத்தில் இருந்த மிகப்பெரிய பதட்ட நிலை தற்போது சூழ்ந்திருப்பதாக எதிர்கட்சிகள் கூறியுள்ளன. ராஜ்யசபா உறுப்பினர் வைகோ “இது எமர்ஜென்ஸிதான்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.