ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தள்ளினார் ஜெகன் மோகன் ரெட்டி.
பிரஜா வேதிகா கட்டடம், அரசு அதிகாரிகளின் முக்கியமான அரசாங்க சந்திப்புகளுக்காக முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.
மேலும் கிருஷ்ணா நதிக்கரையில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் இடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி, சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும், அது அரசு கட்டிடமானாலும் விதிகளை மீறினால் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் ’இசட்’ பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தள்ளிய செய்தி, சந்திரபாபு நாயுடு மேல் உள்ள பழியை, ஜெகன் மோகன் ரெட்டி தீர்த்துகொள்கிறார் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.