Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

’ஆந்திரா டூ ஆப்ரிக்கா’ யார் இந்த கல்கி பகவான்?

’ஆந்திரா டூ ஆப்ரிக்கா’ யார் இந்த கல்கி பகவான்?
, வியாழன், 17 அக்டோபர் 2019 (13:45 IST)
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வருமான வரி சோதனைகளில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். கல்கியின் மகன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமோத்த சோதனையில் ரூ.24 கோடியும், ரூ.9 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதை தவிர்த்து வருமானத்தை கணக்கில் காட்டாமல் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும், தமிழகம் மற்றும் ஆப்ரிக்காவில் இவர் அதிக இடம் வாங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், இந்த கல்கி யார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
webdunia
யார் இந்த கல்கி? 
1989 ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் என்று கூறி தனது பெயரை கல்கி பகவான் என மாற்றிக்கொண்டார் விஜயகுமார். ஆம், வேலூர் மாவட்டம் நத்தம் எனும் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். எல்.ஐ.சி முகவ்ராக இருந்த இவரை தத்துவ ஞானி ஜே.கே.வின் கருத்துக்கள் ஈர்த்தன. 
 
ஜே.கே.வின் தியான கூட்டங்களில் தவறாமல் பங்கேஏஏஅ விஜயகுமாருக்கு ஆந்திர செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற பின்னர்தான் தன்னை கல்கி பகவானாகவும், தனது மனைவி புஜ்ஜம்மாவை அம்மா பகவானாகவும் மாற்றிக்கொண்டார். 
webdunia
இவர் விஷ்ணு அவதாரம் என்றும், இவரது மனைவி பத்மாவதி தாயாரின் அவதாரம் எனவும் அடையாளப்படுத்திக்கொண்டு முதலில் பூந்தமல்லி அருகே ஒரு ஆசிரமத்தை துவங்கினர். பின்னர் ஆசிரமத்தின் கிளை ஆந்திரா வரை நீண்டது. சித்தூர் ஆசிரமத்தையே தலைமையிடமாக கொண்டு இவர்கள் அங்கு இருந்தனர். 
 
இவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆசி பெற ரூ.50,000, இவரது மனைவியை சந்தித்து ஆசி பெற ரூ.25,000 என வசூலித்து வந்துள்ளனர். ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர் நிலம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆப்ரிக்கா என பல இடங்களில் சொத்துக்கள், ஒன்னெஸ் என்ற பெயரில் பல்கலைக்கழகம் என இவரது பெயரில் பல சொத்துக்கள் இருக்கிறதாம். 
webdunia
இதற்கு முன்னர் இவரது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதைபொருள் வழங்கப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது வரி ஏய்ப்பு சர்ச்சையில் குடும்பத்துடன் சிக்கியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாராவது காஷ்மீர் போகணும்னா சொல்லுங்க ஏற்பாடு பண்ணி தறேன்! – பிரதமர் மோடி