திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கடைசி செமஸ்டர் தேர்வை மட்டும் எழுத வேண்டுமென யுஜிசி கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் மட்டும் நீட்தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதே போல் ஜேஈஈ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது இது குறித்து நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என சற்று முன்னர் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதே போல் ஜேஈஈ தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
கொரோனா வைரஸ் நாடு மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவது சரிதானா என்ற கேள்வியை தற்போது சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்