ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள காட்டு பகுதியில் ஒற்றை யானை 16 பேரை கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் வனப்பகுதிகளில் புலி, யானை உள்ளிட்ட பல விலங்குகள் வசித்து வரும் நிலையில் சில சமயங்களில் அவை ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஒரு காட்டு யானை தொடர்ந்து நடமாடி வருகிறது. கடந்த 12 நாட்களாக பல்வேறு பகுதிகளில் சுற்றி திரியும் இந்த ஒற்றை காட்டு யானையால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் யானையை கண்ட மக்கள் பலர் அதை சூழ்ந்து வேடிக்கை பார்த்தபோது அது தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை நடமாடும் பகுதிகளில் உள்ள மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.