கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது சில அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணங்கள் மற்றும் இரு தினங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என்றும் ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் அல்லது வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது