Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் குளிர்கிறது ; என்னை விட்டு விடுங்கள் : நீதிபதியிடம் கெஞ்சிய லாலு

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (11:52 IST)
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனத தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக  இருந்த போது (1991 முதல் 1994 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

 
அதாவது, பீகாரில் உள்ள பல அரசு கரூவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.89 லட்சம் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.   
 
அந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி லாலு பிரசாத் உட்பட 15 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் 2018ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதையடுத்து லாலு உட்பட மற்ற அனைவரும் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
அந்நிலையில், லாலு உள்பட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறையில் இருந்த படியே வீடியோ காணொளி மூலம் லாலு நேற்று விசாரணையில் கலந்து கொண்டார். அப்போது லாலுவிடம் ‘உங்கல் நலம் விரும்பிகள் என்னை தொலைப்பேசி மூலம் மிரட்டினர். ஆனால், அதற்கெல்லாம் நான் அடிபணியப் போவதில்லை. நான் சட்டப்படியே நடந்து கொள்வேன்’ எனக் கூறினார். அது கேட்டி அதிர்ச்சியடைந்த லாலு “சிறையில் மிகவும் குளிர்கிறது. என்னை விடுதலை செய்யுங்கள்” என கெஞ்சினார். அதுகேட்டு கோபமடைந்த நீதிபதி “குளிர்கிறது எனில் தொடர்து மிருதங்கம் அல்லது தபேலா வாசித்துக்கொண்டிருங்கள்” எனக் கோபமாக கூறினார். 
 
அதன் பின் இன்று உங்களுக்கு தண்டனை அறிவிக்கப்போவதில்லை. நீங்கள் செல்லலாம் எனக் கூறினார் நீதிபதி. எனவே, லாலு பிரசாத் உள்ளிட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது. அதேபோல், இந்த வழக்கில் லாலுவுக்கு குறைந்தது 3 வருடம் முதல் 7 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிற்பகல் 1 மணி வரை வெளுத்து கட்டப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இது நம்ம காலம்.. எறங்கி ஆடு கபிலா! ட்ரம்ப் வெற்றியால் எகிறிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும்: ராகுல் காந்தி

திருமணம் செய்து கொண்ட ஆதீனம்? விதிமுறைகள் படி சரியா? - ஆதீனம் தந்த விளக்கம்!

போராட்டம் தொடரும்.. தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன்: கமலா ஹாரீஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments