Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியுடன் மீட்டிங் முடித்த கையோடு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகல்!

மோடியுடன் மீட்டிங் முடித்த கையோடு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகல்!
, செவ்வாய், 10 மார்ச் 2020 (12:25 IST)
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலககியுள்ளார், இது குறித்த கடித்ததை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த ஆட்சியை கலைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை.
 
இந்நிலையில் பாஜக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேரும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். 
 
இந்த சம்பவம் கடந்த வாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று ஜோதிராதித்யா சிந்தியா மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி கடிதம் ஒன்றை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்தேன்; தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது  என குறிப்பிடுள்ளார். 
 
இதனால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மேலும் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாசனுக்கு எம்.பி சீட்; பாஜக தலையீடா? ஜெயகுமார் பதில்!