நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் நல்ல ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும், அதை போன்ற ஒரு ஆட்சி தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறி வருகின்றார்
இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கடந்த இரண்டு வருடங்களில் தனியார் மருத்துவமனைகளில் செய்த மருத்துவ செக்கப்பிற்கு மட்டும் ரூ.3,81,876 செலவாகியுள்ளதாம். இந்த தொகை அரசின் பணத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சுகாதார துறை அமைச்சரே மெடிக்கல் செக்கப்பை அரசு மருத்துவமனையில் செய்யாமல் தனியார் மருத்துவமனையில் அதுவும் அரசு செலவில் செய்திருப்பது குறித்து அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடியின் மதிப்பு மட்டும் ரூ.28000 என்றும், இதுவும் அரசு செலவில் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அமைச்சர்கள் இருக்கும் ஆட்சியைத்தான் கமல் விரும்புகிறாரா? என்று டுவிட்டரில் பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கமல் விரைவில் பதிலளிப்பார் என்று நம்புகிறோம்