கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயம் விற்று கோடீஸ்வரர் ஆகயுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காய விலை எகிறியது.
விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் எகிப்திய வெங்காயம் விற்பனைக்கு வந்தது.
ஆனால், எகிப்திய வெங்காயம் அளவில் இந்திய வெங்காயங்களை விட பெரியதாக இருப்பதாலும், காரம் குறைவாக இருப்பதாலும் மக்கள் பலர் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயம் விற்று கோடீஸ்வரர் ஆகயுள்ளார். ஆம், கர்நாடகா மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜுன.
விவசாயத்தில் இழப்பை சந்தித்த அவர் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் பயிரிட்டார். தற்போது 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்துள்ளார்.
ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.200க்கு விற்கப்படும் நிலையில், 240 டன் வெங்காயத்தை விற்று ரூ.4 கோடியை சம்பாதிக்க உள்ளார்.