கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் அந்தப் பெண்ணும் அவரது இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப் படாத சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண் கர்நாடக மாநிலத்தில் பிரசவத்திற்காக வந்த நிலையில் அவரை ஆதார் அட்டை இல்லை என்பதற்காக மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்
இதனையடுத்து அந்த பெண் வீட்டுக்குச் சென்ற நிலையில் பிரசவவலி வந்து உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த கர்நாடக அரசு கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரையும் சஸ்பெண்ட் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களை டிஸ்மிஸ் செய்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது