100 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம், நூறு யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 உட்பட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்திருந்தது.
அந்த வகையில் தற்போது இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் ஜூன் 11ஆம் தேதி முதல் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாதந்தோறும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது மேலும் படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.