கர்நாடகா தேர்தல் நடந்த போது பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜக ஆட்சி செய்ய முடியாமல் போனது. ஆனால், மஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களாக மாயமாகியுள்ளனர். மேலும், ஆட்சிக்கு அளித்த ஆதரவை இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்களை வளைக்க காங்கிரஸ், மஜத தலைவர்கள் முயன்றனர். இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஹரியானாவிலுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி தங்களது எம்எல்ஏக்களை பத்திரப்படுத்தியும் வருகிறது.
ஆனால், அப்படியும் 3 எம்எல்ஏக்கள் மிஸ்சிங். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் செயல்படும் எம்எல்ஏக்கள் என இம்மூவரையும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரமேஷ் ஜாரகிகோலி, மகேஷ் குமடால்லி மற்றும் உமேஷ் ஜாதவ் ஆகிய மூவரும்தான் மிஸ்சிங். இவர்கள் எம்எல்ஏக்களை தன்பக்கம் இழுக்கும் அளவுக்கு வலிமையானவர்களாம். எனவே, எம்எல்ஏக்கள் காணவில்லை என்ற கடுப்பில் காங்கிரஸ்; ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் மஜக உள்ள நிலையில் குஷியில் உள்ளது பாஜக.