Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி ராஜினாமா: மேலும் சில... கட்ஜூ அதிரடி!!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (12:15 IST)
தமிழகத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைத்து போராட வருமாறு தென் மாநில வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அழைப்பு விடுத்துள்ளார். 


 
 
சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்தது முதல் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மார்கண்டேய கட்ஜூ.
 
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தென் மாநில வழக்கறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அதில், தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பார் அசோசியேசன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை (நாளை) முதல் தினந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
மேலும், சில கோரிக்கைகளுக்காக போராட அழைப்பு விடுத்துள்ளார். அந்த கோரிக்கைகள்...
 
# அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும்.
 
# தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்.
 
# தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்.
 
# விஞ்ஞானிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கும் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 
 
இந்த 4 கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெள்ளை பேண்ட் அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என கட்ஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதை தவிர்த்து ஐபிஎஸ் ஆர்.நட்ராஜ் ஆவர்களை தான் முதல்வராக பறிந்துரை செய்வதாகவும் கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments