Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணூர், கொச்சிக்கு திருப்பப்படும் விமானம்: கோழிக்கோடு விமான நிலையம் மூடல்!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:36 IST)
விமான விபத்து நடந்த கோழிக்கோடு விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது. 
 
விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.  
இந்நிலையில், இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்துள்ளது. எனவே கோழிக்கோடு விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
 
அதோடு கோழிக்கோடு வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments