ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் சட்ட மசோதாவிற்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது
தமிழகம் கேரளா மேற்கு வங்கம் உள்பட சில மாநிலங்களில் உள்ள ஆளுனர்களின் செயல்கள் அத்துமீறுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
இந்த நிலையில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கேரள அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது