கேரளா ஆளுநரின் பேஸ்புக் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கேரள ஆளுநர் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து கேரள ஆளுநர் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
இந்த பக்கத்தை மீண்டும் செயலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள ஆளுநர் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து பல மணி நேரமாகியும் ஆளுநர் இன்னும் பேஸ்புக் பக்கம் செல்லவில்லை
ஆனாலும் அவரது பதிவுகள் அனைத்தும் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஹேக் செய்யப்பட்ட ஆளுனரின் பேஸ்புக் பக்கத்தில் மூன்று பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும் அவை அரபு மொழியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஆளுனரின் பேஸ்புக் பக்கம் இன்னும் சில மணி நேரங்களில் மீட்கப்படும் என்று கூறப்படுகிறது