கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் வெள்ளப்பெருக்கு, மண் சரிவால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோட்டையம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் பொது மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மீட்பு படையினருக்கு கேரளா அரசு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.