Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை பாஜக பழிவாங்குகிறது! – சேட்டன்கள் தேசத்தில் குவியும் ஆதரவு!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (13:21 IST)
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதை தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கேரளாவிலும் விஜய்க்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.


 

பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.

இன்று முதற்கொண்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் We Support Vijay என்ற ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் விஜய்க்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட போஸ்டரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த ரெய்டு குறித்து பேசியுள்ள கேரள மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அன்வர் என்பவர் விஜய்யின் மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் திராவிட மண்ணில் பாஜக காலூன்ற தடையாக அமைந்ததால் பழிவாங்குவதற்காக இந்த ரெய்டை நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை தமிழகம் மற்றும் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments