இந்தியாவில் உருவாக்கப்பட்ட ''கூ'' சமூக வலைதளம் இந்தியாவின் டுவிட்டருக்கு மாற்றாக பிரபலமாகி வருகிறது.
விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை திரும்பவும் பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஆகியோர் கூசமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.