Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி ; காங்கிரஸ் - மஜத கூட்டணியில் புகைச்சல்?

Webdunia
திங்கள், 21 மே 2018 (10:52 IST)
கர்நாடகாவில் சுழற்சி முறையில் ஆட்சி செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி  தெரிவித்துள்ளர்.

 
கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, குமாரசாமி முதல்வர் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. வருகிற புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
 
மதசார்பற்ற ஜனத தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், சில வருடங்கள் குமாரசாமியும், சில வருடங்கள் காங்கிரஸூம் ஆட்சி பொறுப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
2006ம் ஆண்டு பஜக, மஜத கட்சிகள் கூட்டனை அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல் இருமாதங்கள் குமாரசாமிக்கு முதல்வர் பதவி. அதன் பின் எடியூரப்பாவிற்கு முதல்வர் பதவி என தீர்மானிக்கப்பட்டு ஆட்சி நடந்தது. ஆனால், 20 மாதங்கள் கழித்து முதல்வர் பதவியை குமாரசாமி விட்டுக்கொடுக்கவிலை. எனவே அந்த ஆட்சி முடிவிற்கு வந்தது. அதுபோல் இப்போதும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
 
ஆனால், காங்கிரஸ் இதுபற்றி பேசியதாகவும்., ஆனால், குமாரசாமி அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் குமாரசாமி பேட்டியளித்த போது கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அந்த பேச்சுக்கே இடமில்லை. தனது தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் என அவர் தெரிவித்தார். அதேபோல், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இது கூட்டணி ஆட்சி அமையும் முன்பு காங்கிரஸ் கட்சியினருக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments