பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீத் சிங் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002ஆம் ஆண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு பேரில் சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
14ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்ற இந்த வழக்கில் இன்று திர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இவருக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் நிச்சயம் இவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என துணை ராணுவ படை குவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தனக்கு எதிராக தீர்ப்பி வெளியானால் அமைதி காக்குமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்-க்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து வரும் 28ஆம் தேதி அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.