அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”கியார்” என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்தியாவிற்கு இந்த புயலால் எந்த பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.