Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடம் ஆக்சிஜன் இல்லாவிட்டால் மரணம்...

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (10:22 IST)
தொடர்ந்து 3 நிமிடங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்பட்சத்தில், மூளையின் செல்கள் செயலிழந்து மனிதன் உயிரிழப்பான் என தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் பிரச்சினையை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்பதால் இந்த நோயாளிகளின் உயிரைக் காக்க வெளியிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
 
ஒரு நபருக்கு தொடர்ந்து 30 விநாடிகள் முதல் 180 விநாடிகள் வரை சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் அவர் மயக்கமடைவார். இதே தொடர்ந்து 3 நிமிடங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்பட்சத்தில், மூளையின் செல்கள் செயலிழந்து அந்த நபர் உயிரிழப்பார் என மருத்துவர்கள் ஆக்சிஜனுக்கான தேவையை சுட்டிக்காட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments