லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அவ்வாறாக உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்தபோது அங்கு போராடிய விவசாயிகள் மீது கார் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் உள்பட 14 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.